* இலங்கை சென்ற நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்யராஜ்-ராதாரவி ஆவேச பேச்சு* நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்: இலங்கை செல்லும் நடிகர்- நடிகைகளை மிரட்ட கூடாது* வடமாநிலங்களில் இணையத் தளத்தில் பரவும் நடிகையின் செக்ஸ் காட்சிகள்இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார்- திரிஷா* மாலினியாக அவதாரம் எடுத்திருக்கும் அஸ்வதிநாயர்

Download latha tamil font


"South Indian Cinema" as your Homepage



"சினிமா செய்திகள்,19/06/2010,காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி,



டாப் 10 படங்கள் (25/07/2010 - நிலவரப்படி)


01. சிங்கம்

02. தில்லாலங்கடி

03. மதராசபட்டினம்

04. களவாணி

05. வெளுத்துகட்டு

06. குற்றப்பிரிவு

07. மிளகா

08. ராவணா

09. அம்பாசமுத்திரம் அம்பானி

10. மாஞ்சா வேலு



  • இலங்கை சென்ற நடிகை அசின் மன்னிப்பு கேட்க வேண்டும்: சத்யராஜ்-ராதாரவி ஆவேச பேச்சு


    நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்தில் சங்கத்தின் பொது செயலாளர் ராதாரவியும் செயற்குழு உறுப்பினர் சத்யராஜும் இலங்கை சென்ற நடிகை அசினை கடுமையாக கண்டித்து பேசினர்.

    ராதாரவி பேசியதாவது:- இலங்கைக்கு நடிகர்- நடிகைகள் செல்லக்கூடாது என்று திரைப்பட சங்கங்கள் முடிவு செய்து அறிவித்துள்ளன. அதை மீறி அசின் இலங்கை சென்றிருக்கிறார். அவர் கேரளாவை சேர்ந்தவர். எல்லோருக்கும் இன உணர்வு வேண்டும். அசின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வற்புறுத்தப்பட்டது. ஆனால் அதை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று சங்கத்தின் தலைவர் சரத்குமார் கேட்டுக் கொண்டார்.

    அதற்காக அசின் இதுவரை சரத்குமாரிடம் தொடர்பு கொண்டு ஒரு நன்றி கூட தெரிவிக்கவில்லை.

    இலங்கை சென்றதற்காக அசின் நடிகர் சங்கத்தில் நேரில் ஆஜராகி வருத்தம் தெரிவித்து கடிதம் கொடுக்க வேண்டும். இனிமேல் இலங்கைக்கு நடிகர்-நடிகைகள் யார் செல்வதாக இருந்தாலும் நடிகர் சங்கத்தில் சொல்லி விட்டுத்தான் செல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சத்யராஜ் பேசியதாவது:- அசின் இலங்கை சென்றது மட்டுமின்றி ராஜபக்சே மனைவியுடன் சேர்ந்து போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த போது ரத்தம் கொதித்தது. ரத்தக் கண்ணீர் வடிந்தது. இலங்கை என்பது ரத்த பூமி. அங்கு நடிகர்-நடிகைகள் செல்லக் கூடாது. நடிகர் கருணாஸ் இலங்கையில் முருகன் கோவிலுக்கு செல்ல முடிவு செய்திருப்பதாக கூறியுள்ளார். கருணாசை நான் கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து நீங்கள் இலங்கை செல்ல வேண்டாம். அங்கு தனித்தமிழ் ஈழம் மலர்ந்த பிறகு நீங்கள் போகலாம். நானும் வருகிறேன். நான் ஒரு நாத்திகனாக இருந்தாலும் தமிழ் ஈழநாடு உருவான பிறகு அங்குள்ள கோவிலுக்கு செல்ல தயாராக இருக்கிறேன்.

    இலங்கை சென்று தான் சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்க வேண்டாம் அப்படி ஒரு நிலை வந்தால் உயிரையே விடலாம்.

    இவ்வாறு அவர் பேசினார்.



  • நடிகர் சங்க பொதுக்குழு தீர்மானம்: இலங்கை செல்லும் நடிகர்- நடிகைகளை மிரட்ட கூடாது; நடிகர்களிடம் நஷ்ட ஈடு கேட்க கூடாது


    தென்னிந்திய நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் தியாகராயநகரில் உள்ள சங்க அலுவலக கட்டிடத்தில் இன்று நடந்தது. கூட்டத்துக்கு நடிகர் சங்க தலைவர் சரத்குமார் தலைமை தாங்கினார்.

    பொதுச்செயலாளர் ராதாரவி, துணைத் தலைவர்கள் மனோரமா, விஜயகுமார், துணை செயலாளர்கள் காளை, கே.ஆர். செல்வராஜ், பொருளாளர் வாகை சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    நடிகர்கள் சத்யராஜ், சூர்யா, எஸ்.வி.சேகர், ஒய்.ஜி.மகேந்திரன், சார்லி, ஸ்ரீகாந்த், முரளி, சாந்தனு, சரவணன், பொன்வண்ணன், டெல்லி கணேஷ், கருணாஸ், வினுசக்ரவர்த்தி, கஞ்சா கருப்பு, டி.பி. கஜேந்திரன், மன்சூர் அலிகான், எம்.எஸ். பாஸ்கர், நடிகைகள் சீதா, நளினி, சி.ஐ.டி. சகுந்தலா, ஸ்ரீபிரியா, லதா, மும்தாஜ், பூர்ணிமா, சச்சு, காந்திமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    பொதுக் குழுவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

    * இலங்கையில் தமிழ் இன படுகொலைக்கு காரணமானவர்களை சர்வதேச நீதிமன்றத்தின் மூலம் தகுந்த நடவடிக்கை எடுத்து தண்டனை வழங்க வேண்டும்.

    * இலங்கையில் நடை பெற்ற அனைத்து நிகழ்வுகளையும் நாம் அறிவோம். தற்போது அங்குள்ள நம் தமிழர்களின் நிலையையும் அறிவோம். அவர்களின் பிரச்சினைகள் தீர மறு வாழ்வு திட்டத்திற்கு நம்மாலான உதவிகளை மனப்பூர்வமாகவும், பொருள் ரீதியாகவும் செய்து வருகிறோம்.

    ஆயினும் சமீப காலமாக நம் கலைஞர்கள் தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இலங்கை செல்வதை தனிப்பட்ட ஒரு சிலர் விமர்சிப்பதும் பத்திரிகை வாயிலாக தடுத்து நிறுத்த வேண்டும் என்று குரல் கொடுப்பதையும் தனிப்பட்ட முறையில் மிரட்டுவதையும் நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

    எங்களது கலையுலகை சேர்ந்தவர்கள் தொழில் ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும், தனிப்பட்ட முறையிலோ இலங்கை செல்லலாமா, வேண்டாமா என்கிற முடிவை கலையுலகை சார்ந்த அனைத்து அமைப்புகள் கொண்ட கூட்டு கலந்தாய்வு குழுவே முடிவெடுக்கும். நடிகர் சங்க உறுப்பினர்கள் அதன் முடிவுக்கு கட்டுப்பட்டு செயல்படுவார்கள்.

    * திரைப்படங்களில் பணிபுரியும் எங்கள் உறுப்பினர்கள் பெரும் தொழிலாளர்களை திரைப்படத்தின் வர்த்தகத்தில் ஏற்படும் லாப நஷ்டங்களுக்கு நடிகர்கள் பொறுப்பல்ல. திரைப்பட வர்த்தகத்தை சார்ந்தவர்கள் லாப நஷ்டங்களுக்கு எங்கள் உறுப்பினர்களை பொறுப்பாக்க முடியாது. அவர்களிடம் நஷ்டஈடு கேட்க முடியாது.

    * திரைப்பட வர்த்தக சபை, தயாரிப்பாளர் சங்கம் ஆகிய அமைப்புகளுடன் நடிகர் சங்கம் போட்டுள்ள ஒப்பந்தத்தின்படி நடிகர் சங்கத்தில் உறுப்பின ரான பிறகே தமிழ் திரைப் படங்களில் நடிக்க முடியும். உறுப்பினர்கள் ஆகாத நடிகர்கள் ஆகஸ்டு 15-ந்தேதிக்குள் உறுப்பினர்கள் ஆக வேண்டும். இல்லையெனில் உறுப்பினர் அல்லாத கலைஞர்களுடன் நமது உறுப்பினர்கள் பணி புரிய மாட்டார்கள்.

    * இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு புனர் வாழ்வு பணிகள் தாமதமாக நடக்கிறது. அவதிப்படும் எங்கள் சகோதர, சகோதரியான இலங்கை தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்க துரித நடவடிக்கை எடுக்க மத்திய, மாநில அரசுகளை பொதுக்குழு கேட்டுக் கொள்கிறது.

    * நடிகர்கள், தொழிலாளர்களுக்காக நல வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்து நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு வீடுகட்டிக் கொள்ள நிலம் ஒதுக்க கொள்கை அளவில் அரசாணை வழங்கிய முதல்- அமைச்சர் கருணாநிதிக்கு பொதுக்குழு பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்து கொள்கிறது.

    இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    பொதுக்குழு கூட்டத்தில் கே.ராஜன், பூச்சி முருகன், கே.ஆர். வத்சலா, ஒய். விஜயா, ஜெயமாலா, வையாபுரி, ஆதி, நேகாஸ்ரீ, ஆர்த்தி, டாக்டர் சீனிவாசன், ஆனந்தராஜ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    நடிகர் சங்க செயலாளர் நடேசன், மக்கள் தொடர்பாளர்கள் சிங்காரவேலு, கடையம் ராஜு ஆகியோர் வரவேற்றனர்.



  • வடமாநிலங்களில் இணையத் தளத்தில் பரவும் நடிகையின் செக்ஸ் காட்சிகள் “அது நான் அல்ல”-காத்ரீனா கைப் மறுப்பு


    இந்தித்திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் காத்ரீனா கைப்.

    அவர் பல ஆண்களுடன் படுக்கையில் ஆபாசமாக இருக்கும் படம் இணையத்தளம் ஒன்றில் இடம் பெற்றிருப்பதாக சில தினங்களுக்கு முன்பு மும்பையில் தகவல் பரவியது.

    மும்பை நகர ரசிகர்கள் போட்டிப்போட்டு இணையத்தள மையங்களுக்கு சென்று அந்த வெப்சைட்டில் ஓடும் ஆபாச காட்சிகளைப்பார்த்தனர். சில நிமிடங்கள் ஓடும் அந்த படத்தில் ஒரு இளம் பெண் ஒவ்வொரு ஆடையாக கழற்றி வீசும் காட்சிகள் வருகிறது.

    ஒரு கட்டத்தில் அந்த பெண் முழு நிர்வாணமாகி விடுகிறாள். ஆனால் அந்த பெண்ணின் முகம் கொஞ்சமே தெரிகிறது. 4 ஆண்களுடன் அந்த பெண் படுக்கையை பகிர்ந்து கொள்ளும் காட்சிகளுடன் அந்த படம் முடிகிறது.

    ஆபாச காட்சிகளில் உள்ள பெண்ணின் முகம் ஒரு பக்க சாயலாகவே தெரிகிறது. அந்த பெண்ணின் முகம் மற்றும் உடல் அமைப்புகள் நடிகை காத்ரீனா கைப் போலவே இருப்பதாக கூறப்படுகிறது.

    இதையடுத்து காத்ரீனா தான் அந்த ஆபாச படத்தில் இருப்பதாக தகவல் பரவியது. வட மாநில ரசிகர்களிடம் கடந்த 3 தினங்களாக இந்த ஆபாச காட்சிகள் பற்றி பரபரப்பாக பேசப்பட்டது. ஏராளமானவர்கள் அந்த இணையத்தளத்துக்கு சென்று ஆபாச காட்சிகளை டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்பி வருகிறார்கள்.

    இதற்கிடையே அந்த ஆபாச காட்சிகளை சிலர் வீடியோவாகவும் தயாரித்து விற்கிறார்கள். காத்ரீனா கைப் செக்ஸ் ஸ்கேண்டல் என்று தலைப்பு சூட்டப்பட்டுள்ள அந்த வீடியோ கேசட்டுக்களும் மும்முரமாக விற்கின்றன.

    இது குறித்து நடிகை காத்ரீனா கைப்பை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர். அதற்கு அவர் கூறியதாவது:-

    நீங்கள் குறிப்பிடும் வீடியோவை நானும் பார்த்தேன். முழுமையாக பார்க்க முடியாத அளவுக்கு அந்த காட்சிகள் அருவருப்பாக உள்ளது.

    அந்த காட்சிகளில் இருக்கும் பெண் என்னைப் போல இருப்பதாக ரசிகர்கள் நினைக்கிறார்கள். நீங்கள் கூட அப்படித்தான் நினைத்து என்னிடம் கேள்வி கேட்கிறீர்கள். ஆனால் உண்மையில் அந்த பெண் நான் அல்ல.

    அந்த பெண்ணின் முகம் வேறு மாதிரியாக உள்ளது. கொஞ்சம் கூட என் சாயல் போல அந்த பெண் இல்லை. வேண்டும் என்றே யாரோ பொறாமை பிடித்தவர்கள் இந்த ஆபாச காட்சிகளுடன் என் பெயரை சேர்த்து விட்டனர். இது அநாகரீகமானது.

    இவ்வாறு நடிகை காத்ரீனா கைப் கூறினார்.



  • மாலினியாக அவதாரம் எடுத்திருக்கும் அஸ்வதிநாயர்


    கே.டி. குஞ்சுமோன் தயாரிப்பில் "காதலுக்கு மரணமிலலை" படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் அஸ்வதிநாயர் அந்‌தப்படம் அந்தாவரும் இந்தாவரும் ....என எதிர்பார்த்த அம்மணிக்கு அந்தப்படம் வெளிவரும் வழி தெரியாததால் ரஞ்சிதா நாயர் எனப் பெயர் மாற்றினார். அந்‌தப் பெயரும் ஒர்க்அவுட் ஆகாததால் தற்போது மாலினி எனும் பெயரில் "சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி" படத்தில் கதாநாயகி ஆகி இருக்கிறார். "மதுரை-டூ-தேனி" வெற்றிப்படக் குழுவினர் தயாரித்துள்ள இந்தப் படத்தில் கதாநாயகி ஆனதின் மூலம் விமோசனம் கிடைக்கும் என நம்புகிறார்.



  • இந்திப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார்- திரிஷா


    இந்திப் படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயார் என்று திரிஷா கூறினார்.

    அக்ஷய்குமாருடன் ஜோடி சேர்ந்த காட்டா மீட்டா படம் இன்று ரிலீசானது. இதில் முழுக்க புடவை கட்டி வருகிறார்.

    இந்தியில் குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடிப்பீர்களா என்று கேட்ட போது மறுத்தார். திரிஷா கூறியதாவது:-

    காட்டா மீட்டா படத்தில் எனக்கு மாநகராட்சி கமிஷனர் வேடம். எனவே தான் புடவையில் வந்தேன். ஒரு பாடல் காட்சியில் கவர்ச்சி ஆடையுடன் ஆடி யுள்ளேன். இந்திப்படங்களில் கவர்ச்சியாக நடிக்க தயாராக இருக்கிறேன்.

    காட்டா மீட்டா படத்தில் விளம்பர பணிகளில் பங்கேற்க மன்மதன் அம்பு படத்தை இடையில் நிறுத்திவிட்டு மும்பை திரும்பியுள்ளேன். டி.வி. நிகழ்ச்சிகளில் அக்ஷய் குமாருடன் சேர்ந்து பங்கேற் கிறேன். 25-ந்தேதி மீண்டும் மன்மதன் அம்பு படப் பிடிப்புக்காக செல்கிறேன்.

    இவ்வாறு திரிஷா கூறினார்.

    மும்பையில் இன்று மாலை நடிகர், நடிகைகளுக்காக காட்டா மீட்டா படத்தின் சிறப்பு காட்சி திரையிடப் படுகிறது. இதில் திரிஷாவும் பங்கேற்கிறார்.

    இப்படம் மூலமாக தனக்கு மேலும் இந்திப்பட வாய்ப்புகள் வரும் என்று எதிர்பார்க்கிறார்.


  • Bookmark and Share

    South Indian Cinema
    044-64541144
    +91-7299140319
    +91-9841523276
    +91-9176186119
    +91-9043023578

    ©2008



    All Rights Reserved


    No part of this website
    may be reproduced or used
    in any form without permission
    DESIGNED AND HOSTED BY
    "South Indian Cinema"-
    Weekly Magazine
    send your comments
    And corrections