![]() ![]() "South Indian Cinema" as your Homepage "சினிமா செய்திகள்,19/06/2010,காலை,IST- 06.00 மணி,நிலவரப்படி, ![]() டாப் 10 படங்கள் (18/07/2010 - நிலவரப்படி) 01. சிங்கம் 02. மதராசபட்டினம் 03. களவாணி 04. குற்றப்பிரிவு 05. வெளுத்துகட்டு 06. மிளகா 07. ராவணா 08. அம்பாசமுத்திரம் அம்பானி 09. மாஞ்சா வேலு 10. திட்டக்குடி ![]() ஒன் 100 கே அனுஷ்கா ![]() ![]() ![]() அந்தக் காலத்தில் ஒரு படத்திற்கு ஒரு லட்சம் சம்பளம் வாங்கிய காஸ்ட்லி நடிகை என்று கே.பி.சுந்தராம்பாளுக்கு பெயர். அது அந்தக்காலம்,
மணிக்கு இத்தனை லட்சம், சில நிமிட விளம்பரப் படத்துக்கு இத்தனை லட்சம் என்று பெட்டி நிரப்பும் நட்சத்திர நடிகைகள் காலம் இது.
அந்த பட்டியலில் 'சிங்கம்' அனுஷ்கா சேர்ந்துள்ளார். ஒரு பாட்டுக்கு ரூ 25 லட்சம் வாங்கி வந்த அவர் படத்துக்கு ஒரு கோடி ரூபாய் கேட்டு வெற்றியும் பெற்றுவிட்டார். எல்லாம் சிம்புவின் கைங்கர்யம். தெலுங்கில் வெற்றிபெற்ற `வேதம்` படம் தமிழில் ரீமேக் ஆகிறது.
இதில் தெலுங்கில் பாலியல் தொழில் செய்பவராக நடித்த அனுஷ்கா தமிழில் முதலில் நடிக்க மறுத்துவிட்டார். சிம்பு ஹீரோ என்பதால்தான் அனுஷ்கா நடிக்க மறுக்கிறார் என்று ரூமர் பரவ, ஒரு பாடலுக்காவது நடிக்கவேண்டும் என்று தயாரிப்பு வட்டாரம் கட்டாயப்படுத்தியது.
அதற்கு ரூ 25 லட்சம் கேட்ட அனுஷ்காவிடம், ஹீரோயினாகவும் நீங்களே நடிக்க வேண்டும் என்று சிம்பு கேட்க ரூபாய் ஒரு கோடி தந்தால் ரெடி என்றுள்ளார் அனுஷ்கா.
தயாரிப்பு வட்டாரம் அதற்கும் தலையாட்ட தற்போது ஒரு கோடி நாயகியாகிவிட்டார் அனுஷ்கா. எல்லாம் "சிங்கம்" கொடுத்த தைரியம் என்கிறது கோலிவுட் வட்டாரம். “எந்திரன்” ரிலீசுக்கு பின் ரஜினிகாந்த் 6 மாதம் இமயமலையில் ஓய்வு ரஜினியின் எந்திரன் படம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) இறுதியில் ரிலீசாகிறது. ஷங்கர் இயக்குவதாலும், ஐஸ்வர்யாராய் நாயகியாக நடித்துள்ளதாலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இரு வருடங்களாக இதில் நடித்ததால் ரஜினி நீண்ட ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். வழக்கமாக தனது படங்கள் ரிலீசாகும் போதெல்லாம் சில நாட்கள் இமயமலை சென்று ஓய்வெடுப்பது வழக்கம்.
இந்த முறை எந்திரன் வெளியானதும் 6 மாதம் இமயமலையில் ஓய்வெடுக்கச் செல்கிறார். அவரது பயணத்துக்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. இமயமலை பயணத்தின் போது ரிஷிகளை சந்திக்கிறார். ஆசிரமங்களில் தங்கி தியானத்திலும் ஈடுபடுகிறார்.
ரஜினியின் அடுத்த படம் பற்றி பல்வேறு யூகங்கள் கிளம்பியுள்ளன. “பாட்ஷா பாகம்-2” படத்தை தயாரிக்க சத்யா மூவிஸ் நிறுவனம் விரும்புகிறது. இதில் ரஜினியை நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கின்றன. ரஜினியின் அடுத்த படத்தை இயக்குவோர் பட்டியலில் ஏ.ஆர்.முருகதாஸ், கே.எஸ்.ரவிக்குமார், ஹரி ஆகிய மூவரின் பெயர்கள் பலமாக அடிபடுகின்றன. முருகதாஸ் “7-ம் அறிவு” படத்தையும், ரவிக்குமார் “மன்மதன் அம்பு” படத்தையும் இயக்கும் பணியில் உள்ளனர். இப்படங்கள் முடிந்ததும் மூவரில் யார் என்பது முடிவாகும்.
ரஜினியை சந்திக்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர். இது சம்பந்தமாக கடிதங்களும் அனுப்பி வருகிறார்கள். ரஜினி அரசியலில் ஈடுபட வேண்டும் என்பது அவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. ஒவ்வொரு படம் ரிலீசின் போதும் ரசிகர்களை ரஜினி சந்திப்பது உண்டு. “எந்திரன்” ரிலீசின் போதும் சந்திப்பாரா? அல்லது இமயமலை ஓய்வை முடித்து விட்டு வந்து சந்திப்பாரா? என்பது உறுதியாக தெரியவில்லை. டோனி நட்பை விடமறுக்கும் லட்சுமி ராய் பிரபல கிரிக்கெட் வீரர் டோனி திருமணம் செய்துகொண்டதால் அப்செட் ஆகிய இரண்டு நாள் வீட்டிலேயே முடங்கிவிட்டதாக வெளிவந்த தகவலை முற்றிலும் மறுத்துள்ளார் லட்சுமி ராய்.
டோனியின் நண்பர் என்று அறியப்பட்ட நடிகை லட்சுமி ராய் டோனி திருமணத்தால் நட்பு மாறாது என்கிறார். அவர் மேலும் கூறியது "டோனி என் இனிய நண்பர், என்னைப்போல அவருக்கு ஏராளமான நண்பர்கள் உள்ளனர். அவரின் திருமணச் செய்தி அறிந்ததும் முதலில் வாழ்த்து செய்தி அனுப்பியது நான்தான்.
ஆனால் திருமணத்தை பற்றி ஒரு வார்த்தைகூட என்னிடம் அவர் கூறாததில் வருத்தம் உண்டு. டோனி திருமணத்தினால் எங்களின் நட்பில் மாறம் வராது. நட்பு தொடரும்" என்றார் லட்சுமி ராய். பெற்றோர் பார்க்கும் பெண்ணை மணப்பேன் “காதல் திருமணம் செய்யமாட்டேன்” “நான் மகான் அல்ல” பட விழாவில் கார்த்தி பேச்சு கார்த்தி, காஜல் அகர்வால் ஜோடியாக நடிக்கும் படம் “நான் மகான் அல்ல” சுசீந்திரன், இயக்குகிறார். ஞான வேல்ராஜா தயாரிக்கிறார். இப்படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று நடந்தது. டைரக்டர்கள் லிங்குசாமி, ஹரி, விஷ்ணுவர்த்தன், எழில் தயாரிப்பாளர் தயா நிதி அழகிரி ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் கார்த்தி பேசியதாவது:- “நான் மகான் அல்ல” படம் சிறப்பாக வந்துள்ளது. “பையாபட வெற்றிக்கு பின் யுவன் மீண்டும் இந்த படத்திலும் இசையமைத்துள்ளார். பையாவில் இடம் பெற்ற அடடா மழைடா அடை மழைடா பாடலை போகு மிடமெல்லாம் பாடி பெருமை படுத்துகிறார்கள். அது போல் இந்த படத்திலும் எல்லா பாடல்களும் நன்றாக வந்துள்ளன. சுசீந்திரன் இயக்கியுள்ளார். சென்னையில் உள்ள ஒரு நடுத்தர குடும்பம் சந்திக்கும் பிரச்சினைகளே கதை. காஜல் அகர்வால் நாயகியாக நடித்துள்ளார்.
மேடையில் என்னைப் பற்றி நிறைய பேர் பேசினார்கள். நான் காதலிப்பதாகவும் சொல்லப்பட்டது. நிச்சயமாக நான் காதல் திருமணம் செய்ய மாட்டேன். பெற்றோர் பார்க்கும் பெண்ணைத்தான் திருமணம் செய்வேன். அழுக்காக வந்த என்னை பையாவில் அழகாக காட்டிய லிங்குசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு கார்த்தி பேசினார். 'கல்யாண ஏற்பாடா' மறுக்கிறார் கார்த்திகா "தூத்துக்குடி, மதுரை சம்பவம்` உள்ளிட்ட படங்களில் நடித்தவர் கார்த்திகா இவர் அண்மைக்காலமாக அடிக்கடி சொந்த ஊருக்கு போய் வருகிறாராம். இதை வைத்து அவருக்கு மாப்பிளை பார்க்கிறார்கள் அதனால்தான் அடிக்கடி ஊருக்குபோகிறார் என்று தகவல் பரவியது.
ஆனால் இதை மறுக்கிறார் கார்த்திகா. "நான் வளர்ந்து வரும் நடிகை என்பதால் என்னுடைய நடவடிக்கை எல்லாவற்றிற்கும் காரணம் கற்பிக்கிறார்கள், அப்படி பட்டதுதான் இந்த ஊருக்கு போகும் மேட்டரும்.
ஊருக்கு போவதாக இருந்தால் மாப்பிளை தேடித்தான் போகவேண்டுமா? எங்கள் ஊரில் கோவில் திருவிழா நடக்கிறது, என் பாட்டி, தாத்தா இருக்கிறார்கள். அவர்களை பார்க்க, உறவினர்கள் வீட்டு விழாக்களில் பங்கேற்க ஊருக்கு போகக்கூடாதா?" என்று படபட என பதில் கொடுத்தார் கார்த்திகா. South Indian Cinema |